Thursday, May 22, 2025

ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் அதிரடி!

நியாய விலைக் கடை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.. இதனை பலர் ரேஷன் கடை என்று அழைப்பார்கள்.. ஆனால் நியாய விலைக் கடை என்பதே பெயர் ஆகும்.. இந்த நியாய விலைக் கடையில் கொடுக்கும் பொருட்களால் தான் பல வீடுகளில் இருப்பவர்கள் சாப்பிடுகிறார்கள்.. அது மட்டுமின்றி அரசு கொடுக்கும் சலுகைகளுக்கு இந்த ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.. அப்படிப்பட்ட ரேஷன் கார்டை வாங்குவது எளிதல்ல.. அதாவது ஒரு புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு பல மாதங்கள் ஆகின்றனர்..

இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு வாங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்..

அதாவது அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்போது செய்தியாளர் சந்திப்பில் புதிய ரேஷன் கார்டு 15 நாட்களில் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
புதியதாக சுமார் 20 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி புதிய குடும்ப அட்டைகோரி விண்ணபிப்பவர்களின் விண்ணபங்கள் தகுதியாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கபடுகிறது என தெரிவித்துள்ளார்.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் தீர விசாரித்து, தகுதியான நபர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த விசாரணைக்கு 15 நாட்கள் என்ற மிக குறைவான காலத்தை அதிகாரிகள் எடுத்துக் கொள்வது சிறப்பான ஒன்றாகும்..
குறைந்தபட்சம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கூட எடுத்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது விசாரணை நடத்தப்படலாம். அதன் பிறகே ரேஷன் கார்டு கொடுக்கப்படும்.
ஆனால், ஒரு வருடம் ஆகியும் கூட இன்னும் விநியோகிக்கப்படாமல் இருப்பது இன்னும் நடைமுறையில் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் பல மாதங்கள் காக்க வைக்கப்படுகின்றனர்.

ஆப்லைன் விண்ணப்பதாரர்களும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு எந்தவித பதிலும் இல்லாமல் காத்திருக்கிறார்கள்.மேலும், அதைவிடவும் ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் அரசின் ஒப்புதலுக்காக நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கப்படுகிறார்கள்.

ஒரு ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டுமா? என்பதை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கவனத்தில் கொண்டு, அத்தகைய விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
so மக்களே இனிமேல் ரேஷன் கார்டு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்து விட்டது என்று சொல்லாம்..

Latest news