அண்மையில் வெளியான தகவலொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
32 ஆண்டுகளாக தாய்லாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள உலகின் சோகமான கொரில்லாவை விடுவிக்க பீட்டா அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.
உலகின் சோகமான கொரில்லா என்று அழைக்கப்படும் இந்த கொரில்லாவின் சோக கதையை பார்க்கலாம்… தாய்லாந்தில் உள்ள pata என்ற ஷாப்பிங் மாலுக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு ஒரு வயதே ஆன ஒரு குட்டி கொரில்லா குரங்கு ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்டதாம்.
புவா நொய் (Bua Noi) என்ற பெயர் கொண்ட இந்த ஆண் கொரில்லா கொண்டு வரப்பட்டதில் இருந்து வட்ட வடிவமான இந்த ஷாப்ப்பிங் மாலின் மேல் தளத்தில் உள்ள ஜூவில் சிறிய இரும்பிலான கூண்டுகள் வைத்து அதற்குள் அடைக்கப்பட்டது.
வருட கணக்கில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்த கொரில்லாவின் நிலையை கண்டு துயரம் அடைந்த வன விலங்குகள் ஆர்வலர்களும்,பீட்டா அமைப்பும் ஷாப்பிங் மாலின் உரிமையாளர்களிடம் கொரில்லாவை விடுவிக்க வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் £7,00,000 ( இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.6 கோடி) கொரில்லாவை விடுவிக்க சம்மதம் தெரிவித்த உரிமையாளர்கள் பிறகு தொகையை $7,80,000- ஆக உயர்த்திவிட்டனராம்.
இதனால், சுமார் 32 ஆண்டுகளாகவே சிறைபிடிக்கப்ப்பட்டு இந்த கொரில்லா கடும் வேதனையை அடைந்து வருகிறது.
கொரிலாவின் துயரத்தை கண்ட மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்த கொரில்லாவிற்கு விடுதலை கிட்டுமா??