அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அதிபர் டிரம்ப் ஒரு இரவு விருந்தாக ஏற்பாடு செய்து, பல முக்கிய விவகாரங்களை பற்றி விவாதித்தார். இந்த விருந்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக், மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர்கள் எலான் மஸ்க் அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை; அவருக்கு அழைப்பும் வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
விருந்தில் பங்கேற்றவர்களிடம், அதிபர் டிரம்ப் செயற்கை நுண்ணறிவு குறித்து கேட்டறிந்தார். விருந்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த டிரம்ப், உக்ரைன் போர் தொடர்பாக விரைவில் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறினார்.