ட்விட்டர் வாங்கிய உடனே வெளியேற்றப்படுவாரா ?

683
Advertisement

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டரை இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடிக்கு  வாங்கியுள்ளார்.இதையடுத்து  டிவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,

ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிலை என்ன..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால்-ம் முக்கிய உறுப்பினராக இருக்கும் நிலையில், எலான் மஸ்க் நிர்வாகத்திற்கு வந்த பின்பு ,பராக்-ஐ பணி நீக்கம் செய்வாரா என்ற கேள்வி தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது

முன்னதாக , தான் டிவிட்டரைக் கைப்பற்றினால் டிவிட்டர் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு 0 டாலர் சம்பளம் மட்டுமே அளிக்கப்படும் என அறிவித்தார்.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் இருக்கும் இந்திய சிஇஓ-க்களில் மிகவும் இளமையானவர் பராக் அகர்வால்,இந்த நிலையில் பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படலாம், அல்லது தானாக வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி பணி நீக்கம் செய்யப்பட்டால் நிர்வாகம் சார்பில்   பராக் அகர்வாலுக்கு  42 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என ஆய்வு நிறுவனமான ஈக்விலார் தெரிவித்து இருக்கிறது.