கோவையில் ரேஷன் கடையின் ஷட்டரை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை காட்டு யானை சூறையாடிச் சென்றது.
கோவை புதூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது அறிவொளி நகர். அங்கு அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த ரேஷன் கடையின் ஷட்டர் உடைத்து
அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை உண்டு, சூறையாடி, சேதப்படுத்தி சென்றது. இதனால் அப்பகுதியில் அச்சமடைந்துள்ளனர். மேலும், காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்