பெட்ரோல் விலையேற்றம் காரணமாக மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறியுள்ளதை நாம் அதிகம் பார்க்கிறோம்.
சமீபகாலமாக தான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகம் விற்பனையாகி வருகிறது ஆனால் 1996லேயே இது புழக்கத்திற்கு வந்துவிட்டது.
இந்த வீடியோவில் ஒருவர் தன்னுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டின் ஹாலில் சார்ஜ் போட்டு வைத்துள்ளார். திடீரென அது பற்றியெறிய ஆரம்பித்தது.
சட்டென்று அவர் பக்கெட் நிறைய ஏதோ ஒரு திரவத்தை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறார் ஆனால் வழுக்கி கீழே விழுந்த அவர்,கையில் இருந்த பக்கெட் நழுவி அந்த எரிகிற ஸ்கூட்டர் கிட்டேயே சென்று அது மேலும் எரிய ஆரம்பித்து
அதில் இருந்த சில நெருப்பு பொறிகள் அந்த நபரின் மேல் பட அவர் செய்வதறியாது தெறித்து ஓடுகிறார்.
பிறகு தீயணைப்பு துறை மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து அவரையும் வீட்டையும் தீயிலிருந்து மீட்டனர்.
நல்ல வேளையாக ஸ்கூட்டர் பக்கத்தில் நெருப்பை ஈர்க்கக்கூடிய எந்த விதமான பொருளும் இல்லை இருந்திருந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
இந்த வீடியோ அங்கிருந்த cctvல் பதிவாகியுள்ளது.
என்னதான் பாதுகாப்பு நிறைந்த வாகனமாக இருந்தாலும் மின் கசிவு ஏற்பட்டால் அது பெரும் ஆபத்தில் முடியும் என்பதை காட்டும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.