தான்சானியாவில் வெடித்த தேர்தல் வன்முறை : 700 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ம்தேதி நடந்த தேர்தலில் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இது வன்முறை மற்றும் கலவரமாக மாறியது.

இதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த நிலையில், தேர்தல் வன்முறையில் 700 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தரப்பில் அறிக்கைகள் வெளியான பிறகே, அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related News

Latest News