தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தலை நடத்தி முடித்திட இந்திய தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. நேற்றே தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் தேதியை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related News

Latest News