நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக நேற்று முன் தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூகவலைதளங்களை நேபாள அரசு முடக்கியதால் அங்கு போராட்டம் வெடித்தது.
நாடாளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர். ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்து ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றது.
இந்நிலையில், காத்மாண்டுவில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ராணுவம் இன்று (செப்.13) அதிகாலை 5 மணி முதல் விலக்கி உள்ளது. ஆனாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் நேபாளத்திற்கு 2026ம் ஆண்டு மார்ச் 5ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
