கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் தேர்தல் பிரச்சார வாகனம் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரளாவில் வரும் 9ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவின் நெய்யாற்றிங்கரை அருகே உள்ள திருப்புரம் பஞ்சாயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்தாஸ் என்பவர் தனது ஆம்னி வேனை பிரசார பணிகளுக்காக பயன்படுத்தி வந்தார்.
இந்த ஆம்னி வேன் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர்தப்பினார். இதையடுத்து குளத்தில் இருந்து ஆம்னி வேன் அப்புறப்படுத்தப்பட்டது.
