நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 6.15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் தொடங்கியுள்ள குளிர் சீசன், உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 22 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
