அமெரிக்க அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி முதல் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு 25 சதவிகிதம் வரி விதித்துள்ளது. இதனால், நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
வரி விதிப்பு காரணமாக இந்திய முட்டைகளை வாங்க அங்குள்ள வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.