ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

மறைந்த முன்​னாள் முதலமைச்சர் ஜெயலலிதா​வின் 9-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்​கப்​படு​கிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, பா.வளர்மதி உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Related News

Latest News