தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத்தோடு போட்டியிடும் வகையில் திமுக அரசு திட்டம் வகுத்து வருவதை பார்த்து பொறாமையில் எடப்பாடி பழனிசாமி கொந்தளிக்கிறார் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிகையில்,அதிமுக ஆட்சியில் 68 கோடியில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை CAGஅறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியது என்றும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த லேப் டாப் முறைகேட்டை அம்பலப்படுத்திய CAG அறிக்கை 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு ‘கல்விக்கான ஆயுதமாக மடிக்கணினியை, தொடர்ந்து வழங்கி வந்தது தனது அரசு’ என எடப்பாடி பழனிசாமி பச்சைப் பொய் சொல்கிறார் என்றும் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
தான்தான் எல்லாம் செய்பவன் என்ற God Complex என்று மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டுள்ளார். திமுக-வை கார்ப்பரேட் கம்பெனி என விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அடிமை கம்பெனியாக மாறி விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
