Sunday, May 11, 2025

வாக்குறுதிகளை கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார் – திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் சலசலப்பு

2021 தேர்தலில் 525 வாக்குறுதிகளை கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகளை கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரோ, அதே போல கனிமொழி நாடாளுமன்ற தேர்தலுக்கு 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்று வரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்று பேசினார்.

ஸ்டாலின் ஏமாற்றுகிறார் என்று சொல்வதற்கு பதிலாக, எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றிவிட்டார் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

Latest news