தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆண்டிபட்டியில் நடைபெற்ற கூட்டத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், லாட்டரி சீட்டில் பரிசு விழுவது போல பதவிக்கு வந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார். சொந்த நலன் மற்றும் சுய லாபத்துக்காகவும், திமுக அரசிடம் இருந்து வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தவறாக பயன்படுத்தி வருகிறார். துரோகத்தின் உருவமாக பார்க்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி, துரோகம் குறித்து பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.