தெற்கு தைவானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நான்ஸ்சி மாவட்டத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அதனுள் சிக்கி இருந்த குழந்தை உள்ளிட்ட 6 பேர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.