Thursday, January 15, 2026

சைபீரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பொது நிகழ்ச்சிகள் ரத்து

ரஷியாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டார் குடியரசு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 புள்ளி 4 ஆக பதிவாகி இருப்பதாக ரஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு, சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News