இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 எனப் பதிவாகியுள்ளது. சுமார் 7 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ளது.
