சூரிய குடும்பம் என்று சொல்லும்போது, சூரியனைச் சுற்றியுள்ள கிரகங்கள், செவ்வாய், பூமி, வியாழன் போன்றவை அடங்கும். இவை எல்லாம் ஒரு ஒழுங்கான பாதையில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் , ஒரு விஞ்ஞான ஆய்வு இந்த நிலைமை எப்போதும் நிலைநிறுத்தமாக இருக்காது என்று எச்சரிக்கிறது.
வானியலில் ஒரு முக்கியக் கருத்து உள்ளது — Passing Stars என்று, வானத்தில் எப்போதாவது நம்மைத் தொட்டும் கடந்தும் செல்லும் நட்சத்திரங்கள் இருக்கக்கூடும். இந்த நட்சத்திரங்கள் சூரிய மண்டலத்தை (Solar System) மிக நெருக்கமாக கடக்கும்போது, அதனுடைய ஈர்ப்பு விசை (gravitational pull) சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களின் பாதையை சிதறடிக்கும் அபாயம் உண்டு.
இதன் விளைவு என்னவென்றால், பூமி மற்றும் பிற கிரகங்கள், தங்களுடைய நிலையான சுற்றுப்பாதையிலிருந்து வெளியேறி, வேறு வழிகளில் சுழற்சி செய்யலாம்.சில நேரங்களில், பூமி முழுதும் சூரிய மண்டலத்திலிருந்து வெளியேறி விட்டு வேறு விண்மீன் குழுவில் செல்லும் அபாயமும் உண்டு.
இந்த ஆய்வு, N-body simulations என்ற கணினி மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், பல நட்சத்திரங்களும், பூமியும், செவ்வாயும் போன்ற கிரகங்களும், ஒரே நேரத்தில் எப்படி ஈர்ப்பு விசையை பரஸ்பரமாக தாக்கிக் கொண்டிருப்பார்கள் என்பதைக் கணக்கிட முடிந்தது.
மிக அருகில் வந்த ஒரு நட்சத்திரம், நமது சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில் உள்ள Oort Cloud(ஊர்ட் மேகம்) எனப்படும் பனிக்கட்டி கலந்த வெவ்வேறு பொருட்களை பெரிதும் குலுக்கி, அந்தச் சுற்றுப்பாதைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த மாற்றங்கள், கிரகங்களின் நிலைத்தன்மையை பாதித்து, சந்தர்ப்பங்களுக்கேற்ப பூமி மற்றும் பிற கிரகங்கள் வேறு பாதைகளில் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால், சில நேரங்களில், புதன் மற்றும் வீனஸ் போன்ற கிரகங்களின் பாதையும் மாறி, அவர்கள் இடையே மோதல் நிகழக்கூடும் என்பதும் ஆய்வில் காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த passing stars கள் மற்றும் அதன் ஈர்ப்பு விசை சூரிய குடும்பத்தின் நிலைத்தன்மையை எதிர்காலத்தில் பெரிய அளவில் பாதிக்கலாம். இந்த விஞ்ஞான கண்டுபிடிப்பு, நம் கிரகத்தின் எதிர்காலத்தைக் கவனிக்க முக்கியமான தகவலாகும்.