Friday, December 5, 2025

குளிர் காலத்தில் வரும் காது வலி : சாதரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது..!

குளிர் காலத்தில் பொதுவாக ஏற்படும் காது வலியை சாதரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சரியான முறையில் கவனிக்காமல் இருந்தால், இந்த வலி அதிகரித்து பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குளிர்காலத்தில் காதுவலி ஏன் வருகிறது? அதை எப்படி சமாளிப்பது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் காற்றில் தூசுகளின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் மூக்கால் சுவாசிக்கும் காற்று அலர்ஜி ஏற்படுகிறது. குறிப்பாக சளி தொந்தரவு இருப்பவர்களுக்கு யூஸ்டேஷியன் குழாய் வழியாக தூசி செல்வதால் காதுவலி உண்டாகும்.

குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு காது வலி அதிகமாகலாம். குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்று உள் நுழையும்போது மூக்குக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எப்படி சரி செய்யலாம்?

வீட்டிலிருக்கும் போது காதுகளை முறையாக மூடி குல்லா அணிவது முக்கியம். இது குளிர்காற்று காதுக்குள் செல்லாமல் தடுக்கும். வெளியில் செல்லும்பொழுது காது, மூக்கு சேர்ந்து மூடும் வகையில் ‘ஸ்கார்ப்’ போன்ற துணியை பயன்படுத்தலாம்.

குளிர் காற்று காரணமாக ஏற்படும் காது வலிக்கு நீராவி பிடிப்பது நல்லது. அப்போது மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று சென்று நிவாரணம் தேடித்தரும். இதையெல்லாம் செய்த பிறகும் வலி நீங்காவிட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News