Tuesday, January 13, 2026

போலீசை கீழே தள்ளிவிட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஹெரி ஜானிஸ் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் போக்குவரத்து சிக்னலுக்கு வைக்கப்பட்டிருந்த பலகையை உடைத்ததாக ஹெரியிடம் ரஷிய போலீஸ்காரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஹெரி, ரஷிய போலீஸ்காரரை கீழே தள்ளவிட்டு தாக்கியுள்ளார். இதையடுத்து, ஹெரியை கைது செய்த ரஷிய போலீசார் அவரை மாஸ்கோவில் வீட்டு காவலில் வைத்தனர்.

இந்நிலையில், போலீஸ்காரரை கீழே தள்ளிவிட்ட வழக்கில் ஹெரி ஜானிசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

Latest News