‘கோமாளி’ படத்தை இயக்கி வெற்றி கண்ட இவர், தனது இரண்டாவது படமான ‘லவ் டுடே’ படத்தை தானே இயக்கி, நடித்து அதிலும் வெற்றி கண்டார். ‘டிராகன்’ படத்தில் நாயகனாக நடித்து மெகா ஹிட் கொடுத்தார்.
இதையடுத்து தீபாவளி ட்ரீட்டாக பிரதீப்பின் ‘டியூட்’ திரைப்படம் கடந்த 17ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. கடந்த 4 நாட்களில் டியூட் திரைப்படம் உலகளவில் 84 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
தீபாளியை முன்னிட்டு பைசன், டீசல், டியூட் என 3 படங்களில் வெளிவந்தது. இதில் ‘டியூட்’ திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது.
