பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது.
இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் ஒரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்றில்லை, உரிய அதிகாரிகளை அணுகலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.