மத்தியப்பிரதேசத்தில் மதுபோதையில் ஒருவர் ரயிலை மறித்ததால் ஓட்டுநர் செய்வறியாமல் திகைத்து நின்றார்.
மத்தியப் பிரதேசத்தின் பாலகாட்டில் வாரசிவ்னி நோக்கிச் செல்லும் ரயிலின் முன் போதை ஆசாமி ஒருவர் நின்றார். இதையடுத்து கர்ரா ரயில் பாலத்தில் சுமார் 15 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டது. அந்த போதை ஆசாமி தண்டவாளத்தில் இருந்து நகராமல் அப்படியே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை தொடர்ந்து மோசமான நிலையில் ஆத்திரமடைந்த பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கி போதை ஆசாமியை அப்புறப்படுத்தினர். இதையடுத்து ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.