திருப்பத்தூர் அருகே மதுபோதையில் கிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து உணவருந்திய நபர் தவறி விழுந்து உயிரிழந்தார். நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயலிங்கம் என்கிற பட்டு.
இவர் வழக்கம்போல் மது அருந்திவிட்டு, தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது, போதையில் நிலைத்தடுமாறிய விஜயலிங்கம் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், நீண்ட நேரம் போராடி விஜயலிங்கத்தின் சடலத்தை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.