தூத்துக்குடியில் மதுபோதையில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் போலீசாரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், நடத்துநர் கிருஷ்ணகுமார் பேருந்து ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாது என தெரிவித்துள்ளார். அப்போது பயணிகள், அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த நடத்துநர் பயணிகளிடம் அவதூறாக பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக பயணிகள் தகவல் தெரிவித்த நிலையில், திரண்டுவந்து ஊர்மக்கள் பேருந்தை சிறைப்பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, போலீசார் விசாரணை நடத்தியபோது, “எங்கள் சங்கம் நினைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்” என நடத்துநர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதெடார்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.