மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏஷியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணி ஒருவரின் உடமைகளில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவர் தனது உடமைகளில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் (கஞ்சா) கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். இந்தப் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Latest news