திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை காய் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தக்காளி, வெங்காயம், முருங்கை, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன.
இந்நிலையில், விளைச்சல் அதிகரிப்பு காரணமாக முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதங்களில்100 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையான முருங்கைக்காய் வெறும் 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்போது பத்து ரூபாய்க்கு விற்பனையாவதால் முருங்கைக்காய் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழக அரசு முருங்கைகாய்க்கு நிரந்தர விலை வைக்க வேண்டும், மானியத்தில் முருங்கை விதை மற்றும் உரங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.