நம்மில் பலர் நின்றுகொண்டு நீர் அருந்துவதும்,
இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரம்
அவசரமாக அருந்துவதும் வழக்கமாக உள்ளது.
தண்ணீர் குடிக்கும்போது உட்கார்ந்துதான் குடிக்க
வேண்டும். ஏனெனில், நின்றுகொண்டு தண்ணீரைக்
குடிக்கும்போது வயிற்றுக்கு தண்ணீர் அதிவேகமாகச்
செல்லும். அதனால் ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம்
ஏற்படும்.
நின்றுகொண்டே தண்ணீரைக் குடிக்கும்போது
நீரானது குடலுக்குள் நேராகப் பாய்வதோடு, குடல்
சுவரை வேகமாகத் தாக்குகிறது. இப்படித் தாக்குவதால்
குடல் சுவர் மற்றும் இரைப்பை, குடல் பாதை முழுவதும்
பாதிக்கப்படும்.
இப்படியே நீண்டநாட்கள் நின்றவாறு தண்ணீர்
குடித்துவந்தால், இரைப்பை, குடல்பாதையின் மீள்தன்மை
அதிகரித்து செரிமானப் பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
தண்ணீரை நின்றவாறோ நடந்தவாறோ குடித்தால்
சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும்.
இப்படி சிறுநீரகங்களின் செயல்முறை பாதித்தால் ரத்தத்தில்
நச்சுகள் தங்கி சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை தொடர்பான
நோய்களின் தாக்கம் அதிகரிக்கும்.
ஆனால், உட்கார்ந்து தண்ணீர் குடித்தால் உடலின்
அனைத்துப் பாகங்களுக்கும் நீரானது சென்று நச்சுகளை
சிறுநீரகங்களுக்கு கொண்டுசென்று முறையாக வெளியேற்றிவிடும்.
நின்றுகொண்டே தண்ணீர் குடித்தால் மூட்டுவாதம், மூட்டுவலி
போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். மேலும், நரம்பு மண்டலம்
பதற்றத்தோடு இயங்க ஆரம்பிக்கும். இதனால் இரத்த நாளங்கள் விரியும்.
அண்ணாந்து தண்ணீர் குடித்தால் காதுப் பிரச்சினை ஏற்படும்.
டம்ளரில் வாய்வைத்து தண்ணீரைக் குடித்தால் நோய்கள்
வருவது தவிர்க்கப்படும்.
தண்ணீரை அவசரமின்றி குடிக்க வேண்டும். வாய்நிறைய
தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள்
இறக்குதல் வேண்டும். அப்போது உமிழ்நீருடன் கலந்து தண்ணீரை
வயிற்றுக்குள் இறக்கும்போது உணவு எளிதில் செரிமானமாகும்.
இனி, கவனமாக இதுபோன்று செயல்பட்டு நோயின்றி இருப்போம்.