இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது, டோல் கட்டணத்தில் நேரம் மற்றும் பணம் இரண்டையும் சேமிக்க உதவும் புதிய திட்டம் ஒன்று வந்திருக்கிறது. அது தான், “FASTag வருடாந்திர பாஸ்” திட்டமாகவும்.
இந்த ஆண்டு பாஸ், அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 முதல் செயல்படப் போகிறது. இதன் மூலம், உங்கள் கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய எக்ஸ்பிரஸ் வே தளங்களில் டோல் கட்டணத்தை எளிதாகவும், விரைவாகவும் செலுத்த முடியும். இதற்காக புதிய FASTag வாங்க தேவையில்லை. உங்கள் தற்போதைய FASTag-கிலேயே இந்த வருடாந்திர பாஸ்-ஐ செயல்படுத்தலாம்.
இந்த ஆண்டு பாஸ் பெற, rajmargyatra என்ற மொபைல் அப்ளிகேஷன் அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nhai.org என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அங்கு உங்கள் வாகன விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, 3000 ரூபாய் கட்டணம் செலுத்தி, இரண்டு மணி நேரத்துக்குள் உங்கள் FASTag-க்கு ஆண்டு பாஸ் செயல்படுத்தப்படும்.
இந்த ஆண்டு பாஸ்-ஐ வைத்து ஒரு வருடம் அல்லது 200 முறை பயணிக்க முடியும் . அதற்குப் பிறகு, அது சாதாரண FASTag ஆக மாறும். இந்த பாஸ் உங்கள் வாகனத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும், மற்ற வாகனங்களில் பயன்படுத்த முடியாது. மேலும், உங்கள் FASTag வாகன பதிவு எண்ணான VRN உடன் சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், பாஸ் பெற முடியாது.
இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறையும் டோல் கட்டணத்தை தனித்தனியாக செலுத்தாமல், ஒரு கட்டணத்தில் பல முறை பயணம் செய்யலாம். இது நேரத்தையும் பணத்தையும் ஒரே நேரத்தில் சேமிக்கும்.
நீங்கள் அதிகமாக தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் ஒருவராக இருந்தால், இந்த FASTag ஆண்டு பாஸ் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. விரைவில் உங்கள் FASTag-க்கு இந்த ஆண்டு பாஸ் செயல்படுத்தி, பயணத்தை எளிதாக்கிக் கொள்ளுங்கள்.