Monday, June 2, 2025

8 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்

இளம் சென்சேஷனல் ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம் வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கவுதம் மேனன், மிஸ்கின் ஆகியோர் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது 8 நாட்களில் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, டிராகன் திரைப்படம் உலகளவில் 85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். விரைவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news