Thursday, December 25, 2025

சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் : தேதியை குறித்த MTC

சென்னையில் கடைசியாக 2008ஆம் ஆண்டு டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக உயர் நீதிமன்றம் முதல் தாம்பரம் வரை 18ஏ, திருவல்லிக்கேணி முதல் பாரீஸ் கார்னர் வரை 11ஏ உள்ளிட்ட பேருந்துகளை சொல்லலாம். இவை போக்குவரத்து நெரிசலில் இயக்குவது மிகுந்த சிரமமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கூட்ட நெரிசல் ஏற்படும் சமயங்களில் மேலிருந்து கீழே இறங்கி வருவது, வளைவுகளில் திருப்புவது போன்றவை சிரமங்களை ஏற்படுத்தியது. இதுபோன்ற காரணங்களால் சென்னையில் டபுள்டெக்கர் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டன

இந்நிலையில் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இவை எலக்ட்ரிக் பேருந்துகளாக இயக்கப்படும் என்று தெரிகிறது. 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பிதற்குள் சென்னை மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்கின்றனர்.

Related News

Latest News