சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில், சில இடங்களில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் 20 எலக்ட்ரிக் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வார நாட்களில் பயணிகள் எதிர்பார்ப்பு அதிகமுள்ள வழித்தடங்களிலும் இயக்க ஆலோசித்து வருகின்றனர்.
குறிப்பாக அண்ணா சாலை, காமராஜர் சாலை, மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட வழித்தடங்களிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.