நீங்கள் அடிக்கடி ஈரமான டிஸ்யூ கொண்டு முகத்தைத் துடைப்பீர்களா? ஈரமான டிஸ்யூ சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.ஆனால் அதிலிருக்கும் தீங்குங்கள் மற்றும் தவறுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
ஈரமான டிஸ்யூவைக் கொண்டு அழுத்தி துடைத்தால், சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும் என்று நினைத்தால், அது தவறு. ஆகவே எப்போதும் மிதமான அழுத்தத்துடன், மேலிருந்து கீழாக துடைக்க வேண்டும். அதிலும் முகத்தில் பருக்கள் இருந்தால், இன்னும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
ஈரமான டிஸ்யூவில் வாசனைக்காக ஒருசில கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதை கண் மை போடும் இடத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.இல்லையெனில் சில நேரங்களில் இது கண்களுக்கு பாதகமாக முடிந்துவிடும்.
பயணத்தின் போது ஈரமான டிஸ்யூவை மட்டும் பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வீட்டை அடைந்ததும், தவறாமல் முகத்தை நீரால் கழுவிட வேண்டும். மேலும் ஈரமான டிஸ்யூவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது .
சிலர் இதனை குழந்தைகளுக்கு பயன்படுத்துவார்கள் , வாசனைக்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல்ஸை இந்த TISSUE உள்ளடக்கியிருப்பதால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை வர வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல் இதில் ஈரத்தன்மை இருப்பதால் இதைசரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் இதில் பாக்டீரியாக்கள் சேர்ந்து குழந்தைகளுக்கு பயன்படுத்தும்பொழுது அந்த பாக்டீரியாக்கள் பரவும் அபாயம் அதிகம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது.