Saturday, August 23, 2025
HTML tutorial

இனி விலையைப் பற்றி கவலை வேண்டாம்..! வந்துவிட்டது 9 காரட் ஹால்மார்க் தங்க நகைகள்

இந்தியாவில் 9 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால், இந்த 9 காரட் தங்க நகைகள் அதிக அளவில் விற்பனையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9 காரட் தங்கம் என்பது 1000 கிராம்களில் 375 கிராம் சுத்த தங்கம் மற்றும் மற்ற உலோகங்கள் சேர்ந்த கலவை ஆகும். உதாரணமாக, 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.1 லட்சமாக இருந்தால், 9 காரட் தங்கம் 10 கிராமுக்கு ஜிஎஸ்டி உட்பட சுமார் ரூ.38,000 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

9 காரட் தங்க நகைகளின் விலை 22 காரட்டுக்கு ஒப்பிடும்போது குறைவாக இருப்பதால், அதிக மக்கள் இதனை வாங்குவார்கள் என்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு நகைகள் தயாரிப்பதும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் 9 காரட் தங்கத்தில் விரும்பிய எந்தவொரு வடிவமைப்பும் செய்யக்கூடியது என்பதால் டிசைனர்களுக்கும் இது நல்ல வாய்ப்பு.

இதுவரை 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் வழங்கப்பட்டுள்ள நிலையில், இனி 9 காரட் நகைகளுக்கும் தரச்சான்று வழங்கி, தரமான நகைகள் வாங்கும் நம்பகத்தன்மையை மேம்படுத்த உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News