Saturday, August 2, 2025
HTML tutorial

‘டீப் சீக்’ செயலியால் ஆபத்து என்றால் அதை பயன்படுத்த வேண்டாம் : டெல்லி நீதிமன்றம்

ஏ.ஐ செயலியான ‘டீப்சீக்’ உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இதனை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் ‘டீப்சீக்’ செயலி இந்திய பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதனை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிடப்ப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது : “டீப்சீக்” செயலி பயனாளர்களுக்கு ஆபத்தை தரக்கூடும் என்றால், அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்க கூடிய அளவிற்கு முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை நிராகரிப்பதாக நீதிபதிகள் அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News