Tuesday, August 12, 2025
HTML tutorial

“எய்ம்ஸை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” – தமிழிசை பேட்டி

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் 11 ஆண்டு காலம் மோடி அரசின் நல்லாட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ், மற்றும் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.

கருத்தரங்கில் பேசிய தமிழிசை செளந்தரராஜன்:-

ஜன் தன் திட்டத்தால் 50 கோடி மக்களுக்கு இந்தியாவில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. பாரத பிரதமர் எவ்வளவு தொலை நோக்கோடு செயலாற்றி கொண்டிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசுகிறார். மதுரைக்கு வந்த அமித்ஷா அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை பார்வையிட்டாரா என கேட்கின்றார்.

ஸ்டாலின் அவர்களே, உங்களைப்போல் அமித்ஷா கிடையாது. மணிப்பூர், காஷ்மீர் பிரச்சனைகளை நேரில் சென்று பார்க்கின்றார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு கூட உங்களால் போக முடியவில்லை,

ஒரு செங்கலை எடுத்துக்கொண்டு இது எய்ம்ஸ் என்று ஏதோ திறமையாக பிரச்சாரம் முடித்துக் கொண்டு வருகின்றார். 10 ஆண்டுகளில் 22 எய்ம்ஸ் நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் எய்ம்ஸ் வரும். அமெரிக்கா, லண்டனில் என்ன சிகிச்சை கிடைக்கிறதோ அந்த சிகிச்சை எய்ம்ஸ் மருத்துவமனையில் கிடைக்கும், அதற்கு கொஞ்சம் காலதாமதமாகும்.

எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் போது தமிழ்நாட்டில் உங்கள் ஆட்சி இருக்காது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கும் ஸ்டாலின்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News