உலகின் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான IPL, தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளாக இலவசமாக IPL ஒளிபரப்பை வழங்கிவந்த Jio, Hotstar உடனான இணைப்பிற்கு பிறகு, ‘காசு கொடுத்தா Match பாக்க முடியும்’ என கறார் காட்டி வருகிறது.
மறுபுறம் எல்லா நேரத்திலும் TVயில் பார்க்க முடியாது என்பதால், மொபைல் டேட்டாவுக்கும் ரசிகர்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தநிலையில் அரசு நிறுவனமான BSNL, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்றவொரு ஆபரை அளித்துள்ளது.
இந்த திட்டத்தில் நீங்கள் 251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 251 GB டேட்டா கிடைக்கும். அதாவது ஒரு ரூபாய்க்கு 1 GB டேட்டாவை BSNL வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 60 நாட்கள். இதில் Unlimited Calls, SMS போன்ற சலுகைகளை பயனர்கள் அனுபவிக்க முடியாது. BSNL தற்போது தனது நெட்வொர்க் குறைபாடுகளை சரிசெய்து, நாடு முழுவதும் 4G சேவையை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.