Saturday, December 21, 2024

மாம்பழம் சாப்பிடும்போது மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க! கவனிக்க வேண்டிய சரியான முறைகள்…..

வெயில் காலத்தில் பலருக்கும் favourite பழமான மாம்பழத்தை வைத்து பலவிதமான ரெசிபி செய்து அசத்துவது வழக்கம்.

ஆனால், மாம்பழத்தின் தோலை சேர்த்து சாப்பிடுவது சரியா தவறா என யோசித்ததுண்டா?

பெரும்பாலும், அந்த சுவை பிடித்தவர்கள் சாப்பிடுவதும் பிடிக்காதவர்கள் அதை நீக்கி விட்டு சாப்பிடுவதும் வாடிக்கை. நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான சில நுண்சத்துக்களும் மாம்பழத் தோலில் இருந்தாலும் கூட, உருஷியோல் என்ற உட்பொருள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது.

மேலும், மாம்பழத்தின் சுவையை தோலின் சுவை கெடுக்கும் என்பதால் அவற்றை நீக்கிவிட்டு சாப்பிடுவதே சிறந்தது. மாம்பழங்களை வெட்டி வெளியே வைத்து விட்டால் சற்று நேரத்தில் அவை கருப்பாகி விடும்.

இதை தடுக்க சரியான மாம்பழத்தை தேர்வு செய்வது அவசியம். உறுதியாக இருக்கக் கூடிய ஆனால் அமுக்கினால் அமுங்கக் கூடிய அளவில் பழுத்துள்ள பழத்தை தேர்வு செய்து இரண்டாக வெட்டி பின் சதுர வடிவ துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளலாம்.

மாம்பழத் துண்டுகள் கறுப்பாவதை தடுக்க அன்னாசி, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாறு கலந்து வைக்க வேண்டும். மேலும், காற்றுப்புகாத வண்ணம் Air Tight Containerகளில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் மாம்பழங்கள் கறுப்பாகாமல் fresh ஆக இருப்பதை கண்கூடாக காண முடியும்.

Latest news