சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. குடியிருப்புப் பகுதிகளில் கார்களை நிறுத்த இடமில்லாமல் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதால் பலருக்கும் இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக, இனி சென்னையில் கார் வாங்குவோர் காரை நிறுத்துவதற்கு சொந்த இடம் இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்ற விதிமுறையைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் அளித்துள்ளது.
கார் வாங்குபவர்கள், எத்தனை கார் வாங்குகிறார்களோ, அதற்கான நிறுத்துமிடச் சான்றிதழ் வழங்குவது அவசியம். புதிய விதிமுறைகளுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.