தமிழ்நாட்டில் வீடு தேடி வந்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் படிப்படியாக இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
வீடுகளுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 10 கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.