கூகுள் பிளே ஸ்டோருக்கு அப்பாற்பட்ட மூன்றாம் தரப்பு பிளாட்ஃபார்ம்களிலிருந்து அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்வது பலருக்கே வழக்கமான செயலாக இருக்கலாம். ஆனால், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் கடுமையானவை. இதுகுறித்து கூகுள் சமீபத்தில் முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரிலேயே பாதுகாப்பாக அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் அறிவுறுத்தியுள்ளது. மூன்றாம் தரப்பு வெப்சைட்டுகள் மற்றும் பிளாட்ஃபார்ம்களில் இருந்து டவுன்லோட் செய்யப்படும் அப்ளிகேஷன்களில் மால்வேர் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதும், இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதையும் கூகுள் எச்சரித்துள்ளது. சில நேரங்களில் இதனால் பொருளாதார இழப்புகளும் ஏற்படலாம்.
கூகுள் வெளியிட்ட தரவுகளின்படி, பிளே ஸ்டோருக்கு வெளியே இருந்து டவுன்லோட் செய்யப்படும் அப்ளிகேஷன்களில் 50% வரை மால்வேர் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க, 2023ஆம் ஆண்டில் மட்டும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 2.3 மில்லியன் சந்தேகத்திற்குரிய அப்ளிகேஷன்களை நீக்கியது. எனவே, பாதுகாப்பாக இருக்க, அதிகாரப்பூர்வமான மூலமான கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய வேண்டியது அவசியம்!