Friday, April 25, 2025

இந்தியாகிட்ட மோதாதீங்க… ஆழம் தெரியாமல் காலை விடாதீங்க! டிரம்புக்கு விடப்பட்ட எச்சரிக்கை! ரத்தக்களரியாகும் சர்வதேச பொருளாதாரம்!

“இது என்னடா அமெரிக்காவுக்கு வந்த சோதனை” என்றாகிவிட்டது தற்போது பொருளாதாரத்தில் நடந்துவரும் சலசலப்புகளையும் சறுக்கல்களையும் பார்த்தால்… ஆனால் இது அமெரிக்காவோடு முற்றுப்புள்ளி வைத்து நிறுத்தப்படபோவதில்லை. உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி சர்வதேச நாடுகளையும் புரட்டிப்போட்டுவிடும் என்பதால் வர்த்தக வல்லுனர்களின் ஆதங்கங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அர்த்தம் இருக்கவே செய்கிறது.

ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேமி டிமோன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த வரி முடிவுகளை கடுமையாக விளாசி தள்ளியுள்ளார். அவர் ஆரம்பித்துவைத்துள்ள வர்த்தக போர் பணவீக்கத்துக்கு வழிவகுத்து, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவை மந்தநிலைக்கு இட்டு செல்லும் என்று எச்சரித்துள்ளார்.

முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா பகைக்க கூடாது எனவும் தங்களுக்கு இணங்குமாறு கேட்காமல் இந்தியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா இணக்கமாக சென்று அவர்களுடன் சுமூகமான வர்த்தக உறவுகளை வளர்த்துக் கொள்வதோடு இந்தியா போன்ற நாடுகள் அணிசேரா நாடுகள் என்பதால் அவை உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் ‘ஒருசில தினங்களுக்கு முன் டிரம்ப் அறிமுகம் செய்த கட்டணங்கள் பணவீக்கத்தை அதிகரித்து சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை ஏற்படும். இது போன்ற நேரத்தில் இந்தியா போன்ற அணிசேரா நாடுகளுடன் டிரம்ப் நட்பையே கடைபிடிக்க வேண்டும்’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி வரிகளை அறிமுகம் செய்ததையடுத்து இந்த வாரம் மார்க்கெட் ரத்தக்களறியாகி கபளீகரமாகிவிட்டது. சீனாவில் கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக மார்க்கெட் சரிந்து தரைதட்டிவிட்டது. டிரம்ப் போட்ட ஒரே ஒரு கையெழுத்து பொருளாதார அழிவுக்கு வாசலை திறந்து வைத்துவிட்டது என்பதே பல தரப்பினரின் தற்போதைய புலம்பலாக இருக்கிறது.

Latest news