பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : சென்னையில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதால் தலைநகரமா அல்லது கொலை நகரமா என கேள்வி எழுப்பினார்.
தமிழ் தமிழ் என்று கூறுபவர்கள் தமிழுக்காக என்ன செய்தீர்கள் என்றும், 40 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக எடுத்துக் கூறினார். மேலும் அவர் பேசுகையில் என்னை இந்தி இசை என கூப்பிட்டால் கெட்ட கோபம் வரும் என எச்சரித்தார்.