இந்தியாவில் தங்கத்திற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. பல நூற்றாண்டுகளாக, தங்கம் ஒரு மங்களகரமான சின்னமாக பார்க்கப்படுகிறது. அதாவது, திருமணம், பிறந்தநாள் {அ} வேறு எந்த நிகழ்வுகளிலும் தங்கம் இல்லாமல் நடப்பது அரிதான ஒன்றாகும்.
இதனைவிட குறிப்பாக, சேமிப்பின் அடையாளமாகவும், முதலீடுகளின் ஆதாரமாகவும் தங்கம் இருந்து வருகிறது.
ஆனால், ஒரு புதிய உலோகம் எதிர்காலத்தில் தங்கத்தை விட மதிப்புமிக்கதாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதாவது, சர்வதேச துத்தநாக சங்கத்தின் (International Zinc Association – IZA) இயக்குனர் ஆண்ட்ரூ கிரீன் { Andrew Green} பேசுகையில், இந்தியாவில் துத்தநாக நுகர்வு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது, நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.1 மில்லியன் டன் துத்தநாகத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், இது 2 மில்லியன் டன்னாக மாறும் என்று கூறினார். இதன் பொருள் இந்த உலோகத்திற்கான தேவை தங்கத்தை விட அதிகமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சமீப காலமாக தங்கத்தின் விலைகள் ஏறியும் இறங்கியும் வருகின்றன. ஒரு வருடம் முன்பு, 10 கிராம் தங்கம் ரூ.75,000க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது , ரூ.1,20,000திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும், அதே நேரத்தில், துத்தநாகத்தின் பயன்பாடு மற்றும் தேவை தங்கத்தை விட அதிகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ கிரீன்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13.5 மில்லியன் டன் துத்தநாகம் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவில் தனிநபர் துத்தநாக நுகர்வு உலகளவில் சராசரியை விட நான்கு முதல் ஐந்து மடங்கு குறைவாக உள்ளது. ஆகையால், உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்ய இந்தியாவில் துத்தநாக நுகர்வை அதிகரிப்பது அவசியம் என்று கூறினார்.
மேலும், தொழில்துறையில் துத்தநாகத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். உலகளாவிய ஆட்டோமொபைல் துறை 90-95 சதவீதம் கால்வனேற்றப்பட்ட எஃகு பயன்படுத்துவதில், இந்தியாவில் இது 23 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறது.
அதாவது இந்த துத்தநாகம் எஃகு துருப்பிடிக்காமல் பாதுகாக்கிறது. மேலும், சூரிய மற்றும் காற்றாலை மின் துறைகளிலும் துத்தநாக தேவை கணிசமாக அதிகரிக்கும் என்று கிரீன் கூறினார். வரும் ஆண்டுகளில் சூரிய ஆற்றல் துறையில் துத்தநாக தேவை 43 சதவீதம் அதிகரிக்கும் என்றும், காற்றாலை மின் துறையில் துத்தநாக நுகர்வு 2030 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
