உலகிலேயே தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனாலும் இந்தியர்களிடம் பெரும்பாலும் தங்கம் நகைகளாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் 2024ம் ஆண்டில் இந்தியாவின் தங்க நகை நுகர்வு 563.4 டன்னாக இருந்தது. ஆனால் சீனாவில் கூட அதே காலத்தில் தங்க நுகர்வு 511.4 டன் மட்டுமே. மேலும் இந்தியா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் என்ற தெற்காசிய நாட்டின் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் மொத்த தங்கத் தேவை ஆண்டுக்கு ஆண்டு 5% அதிகரித்து 2024ம் ஆண்டில் 802.8 டன்னாக அதிகரித்துள்ளது. நிலைமை இப்படி இருந்தாலும், நிதி வல்லுநர்கள் பலரும் எச்சரிக்கையுடன் தங்கத்தில் முதலீடு செய்யவே அறிவுறுத்துகின்றனர்.
முதலீட்டு ஆலோசகரான CA. அபிஷேக் வாலியாவின் கருத்துப்படி, ‘இந்தியர்கள் பெரும்பாலும் தடுமாறுவது முதலீட்டில்தான், ஏனெனில் தங்கம் வாங்குவதை ஒரு முதலீடாக கருதுகின்றனர். ஆனால் அது அப்படி செயல்படாது. தங்கத்தை வாங்கி வைப்பது ஒரு போதும் உங்கள் சொத்து மதிப்பை உயர்த்தாது. மாறாக பல்வேறு முதலீடுகள்தான் உயர்த்தும். உதாரணமாக கோல்ட் ETF மற்றும் பங்கு முதலீடுகள் செய்து, முதலீட்டை பல்வேறு வகைகளில் பிரித்தால் மட்டுமே உங்கள் செல்வம் அதிகரிக்கும்’ என விளக்கமளித்துள்ளார்.
மேலும் ‘ஈவுத்தொகை செலுத்தும் பங்குகள், வாடகைக்கு சம்பாதிக்கும் சொத்து அல்லது வட்டியை உருவாக்கும் பத்திரங்களைப் போலல்லாமல், தங்கம் ஒரு லாக்கரில் அப்படியே இருக்கும்’ என்று வாலியா கூறுகிறார். மட்டுமல்லாமல் ‘இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பங்கள், தங்கத்திற்கான சரியான இன்சூரன்ஸ் கூட இல்லாமல், பல வருடங்கள் லாக்கரில் அல்லது அடமானத்திலேயே வைத்துவிடுகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பயன் தருமே தவிர வருடத்துக்கு வருடம் செல்வத்தை அதிகரிக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. முதலீடு பற்றிய ஆலோசனைகளுக்கு தனிப்பட்ட பொருளாதார வல்லுனர்களின் வழிகாட்டுதலை பெறுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.