அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை, நிர்வாக ரீதியாக சீர்படுத்துவதற்காக 10% பணியாளர்களை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1,000 தற்காலிக பணியாளர்கள் மற்றும் 750 நிரந்தர பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் அழுத்தத்தால் மேலும் பலரும் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.