Friday, December 27, 2024

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு மரண தண்டனை உறுதி – டிரம்ப்

அமெரிக்க நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனை டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை ஜோ பைடன் குறைத்துள்ளார். அமெரிக்க குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வன்கொடுமையாளர்கள், கொலையாளிகள் மற்றும் அரக்கர்களுக்கு மரண தண்டனையை தீவிரமாக மேற்கொள்ள நீதித்துறைக்கு உத்தரவிடுவேன். சட்டம் மற்றும் ஒழுங்குள்ள நாடக அமெரிக்காவை மீண்டும் மாற்றுவேன்” என டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.

Latest news