தென்கொரியாவில் புஷான் விமான நிலையத்தில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு முக்கிய சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால வர்த்தக மற்றும் வரி பிரச்சனைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடந்தன.
இந்த ஆலோசனையில் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சீனப் பொருட்கள் மீதான வரியை டிரம்ப் 10% குறைத்துள்ளார். இதன்மூலம் 57% ஆக இருந்த வரி தற்போது 47% ஆக குறைந்துள்ளது.
